இயகுனர் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
சில ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபடாத சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விவேகம் மற்றும் விஸ்வாசம் படங்களுக்குப் பின் இப்போது வரிசையாக படங்களை தயாரித்து வருகிறது. இப்போது தனுஷை வைத்து இரண்டு படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் அடுத்ததாக விஷால் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாம்.
இந்த படத்தை ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்க உள்ளாராம். ரவி அரசு இந்த கதையை விஜய்க்காக தயார் செய்து வைத்திருந்தாராம். கதையைக் கேட்டு பிடித்துப் போன விஷால் அதில் தானே நடிப்பதாக சொல்லியுள்ளாராம். தற்போது கன்னட படத்தை இயக்கி வரும் ரவி அரசு அடுத்ததாக இந்த படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.