ராஷ்மிகாவுக்கு வாழ்த்து சொன்ன முன்னாள் காதலர் – ஒரு ரியாக்‌ஷனும் இல்ல!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (16:37 IST)
வளர்ந்து வரும் இளம் நடிகையான ராஷ்மிகா தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வந்த நிலையில் இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளார்.

"கிரிக் பார்ட்டி" என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் அவர் சேர்ந்து நடித்த படங்களான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்து தென்னிந்திய சினிமா உச்ச நடிகையாக வலம் வந்தார். இப்போது அவர் பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் ராஷ்மிகா இப்போது தன்னுடைய பிரபல பாடல் ஒன்றைப் பகிர்ந்து 100 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட பாடல் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த டிவிட்டைப் பகிர்ந்த ராஷ்மிகாவின் முன்னாள் காதலரான ரக்‌ஷித் ஷெட்டி ‘மேலும் மேலும் மேலும் வளருங்கள் பெண்ணே. உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறும் வரை’ எனக் கூறியுள்ளார். ஆனால் ரக்‌ஷித்தின் டிவீட்டுக்கு ராஷ்மிகாவின் பக்கத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்