ரசிகைகள் மீது பாய்ந்த நடிகர்; வலுக்கும் கண்டனங்கள்

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (16:03 IST)
நடிகர் ரன்வீர் சிங் செய்த செயலால் கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
 
பாலிவுட்டில் கலக்கிவரும் நடிகர் ரன்வீர் சிங், சமீபத்தில் தனது காதலி தீபிகா படுகோனை திருமணம் செய்துகொண்டார். இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ரன்வீர்சிங்கின் கல்லிபாய் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ந் தேதி ரிலீசாக இருக்கிறது. நிக்ழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரன்வீரை காண ஏராளமாக ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.
 
அப்போது மிகுந்த உற்சாகமடைந்த ரன்வீர், திடீரென பாடிக்கொண்டே அங்கிருந்த ரசிகர், ரசிகைகள் மீது பறந்து விழுந்தார். இதனை யாறும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த திடீர் செயலால் ரசிகை ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிகிறது. படத்தில் வருவது போல் நினைத்து இப்படி செய்வது கண்டிக்கத்தக்கது என ரன்வீருக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்