எனக்கும் மஞ்சுவாரியருக்கும் ஒரே விதமான காதல்: குக் வித் கோமாளி ரக்சன்..!

Siva
வெள்ளி, 29 மார்ச் 2024 (14:21 IST)
எனக்கும் நடிகை மஞ்சுவாரியருக்கும் ஒரே விதமான காதல் என்று குக் வித் கோமாளி தொகுப்பாளர் ரக்சன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசன்களாக தொகுத்து வரும் ரக்சன் ஐந்தாவது சீசனையும் மணிமேகலையுடன் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்த பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகை மஞ்சு வாரியரிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து எனக்கும் மஞ்சுவாரியருக்கும் இடையே ஒரே விதமான காதல் என்றும் இருவருக்கும் பைக் மீது காதல் என்றும் தெரிவித்துள்ளார்..

நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்திற்கு பின்னர் பைக் ஓட்ட பழகியதோடு புதிய பைக் வாங்கி இருந்தார் என்பதும் அவ்வப்போது பைக் குறித்து நடிகர்களிடம் பேசி வருகிறார் என்பது தெரிந்தது.

அந்த வகையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பின் போது அவர் ரக்சனுடன் பைக் பற்றி பேசியவுடன் ரக்சனும் பைக் குறித்து பலவிதமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்த புகைப்படத்தை எடுத்து அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து மஞ்சுவாரியர் அவர்களுடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் அவருடன் பேசும் போது பல அனுபவங்கள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakshan Vj (@rakshan_vj)

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்