மும்பை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன ரஜினி

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (09:45 IST)
மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு ரஜினி செல்வது போன்ற காட்சி நேற்று படமாக்கப்பட்டுள்ளது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘காலா’. ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், சாக்‌ஷி அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்தை, வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில், சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மும்பையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. நேற்று, மும்பையில் உள்ள  அந்தேரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. கறுப்பு நிற பைஜாமாவில், பச்சை நிற பைக்கின்  பின்னால் ரஜினி அமர்ந்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியில் கசிந்துள்ளன. பைக் ஓட்டுபவரைப் பார்த்தால்,  ‘மெட்ராஸ்’ படத்தில் ஜானியாக நடித்தவரைப் போலத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்