சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படத்தை இயக்கினார் ரஞ்சித். இந்த திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டாலும், கலவையனா விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2.0 படத்திற்கு பின்னர் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என அவரது மருமகன் தனுஷ் அறிவித்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தகவலை இயக்குனர் ரஞ்சித் மற்றும் தனுஷ் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளனர்.
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதால் இது கபாலி கதையின் தொடர்ச்சியாக இருக்கலாம் எனவும், கபாலி-2 என்ற பெயரில் வரலாம் என பேசப்படுகிறது. ஆனால் கதை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.