ரஜினியின் 2.ஓ படம் ரூ 350 கோடி இன்சூரன்ஸ் செய்து புதிய சாதனை!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (16:43 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 2.0. இதில் ரஜினி ஜோடியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி  நடிகர்  அக்‌ஷய்குமார் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2.0 திரைப்படம் ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு புதிய சாதனைப் படைத்துள்ளது.  இந்தியாவில் இதுவரை எந்தப் படமும் இவ்வளவு பெரும் தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டதில்லை.
 
முன்பு ரஜினி நடிக்க எந்திரன் படத்துக்கும் ரூ 100 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்தது நினைவிருக்கலாம். அதன் பிறகு ராஜமௌலி  தன் பாகுபலி படத்துக்கு 110 கோடிக்கு காப்பீடு செய்தார். இதற்கு அமீர்கான் நடித்த பிகே படத்துக்கும் ரூ. 300 கோடியில் இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
 
படப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கள், உயிர் இழப்பு, படப்பிடிப்பு பொருட்கள் சேதம், செட் சேதம் அடைதல்  போன்றவற்றுக்கு  ந்த இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற முடியும். சமீபத்தில் வேறு சில படங்களுக்காக நடந்த படப்பிடிப்பின்  போது, தீவிபத்து, உயிர் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன. இது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவே  இந்த படம் இன்சூரன்சு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.
 
இது இந்தியாவில் அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக  ரூ. 350 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்ட படமாக ரஜினியின் 2.0 விளங்குகிறது.
 
 
அடுத்த கட்டுரையில்