25 நாட்களில் ரஜினியின் காட்சிகளை படமாக்கினாரா சிவா!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:30 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் தீபாவளி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.

தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள இந்த படத்தின் வியாபாரத்தை இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தமிழக திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்தாலும் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெறும் 25 நாளில் படமாக்கி முடித்துள்ளாராம் சிவா. தெளிவான திட்டத்தோடு சென்றதால் இப்படி குறுகிய நாட்களிலேயே முடிக்க முடிந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்