ரஜினி, கமலுக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்....இளம் நடிகரின் புகைப்படம் வைரல் !

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (21:45 IST)
தமிழ் சினிமாவில் இளம்நடிகர் ஹரிஸ் கல்யாண். இவர் தனது டுவிட்டரில்ரஜினி, கமலை அடுத்து, 3 வது சூப்பர் யார்? என யாராவது கெஸ் பண்ணுங்கள் என்று கேள்வி கேட்டிருந்தார். தற்போது ஷாருக்கான் போன்று ஒரு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் ரீ டுவீட் செய்து வருகின்றனர்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படத்துக்கு ஹே (HEY)எனப் பெயரிடப்பட்டுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்க்ரின் சீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஆனால் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரும் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தளபதி ரஜினிகாந்த் கெட் அப்பில் ஹரிஷ் கல்யாண் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த படத்துக்கு ஸ்டார் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அந்த போஸ்டர் வெகுவாக கவனம் ஈர்த்ததை அடுத்து இப்போது சிவப்பு ரோஜாக்கள் கமல் கெட் அப்பில் ஹரிஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரும் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
 

இந்நிலையில் ரஜினி, கமலை அடுத்து, இன்னொரு சூப்பர் ஸ்டாரின் கெட்டப்புடன் ஒரு போட்டோஷுட்டை நடிகர் ஹரீஸ் கல்யாண் வெளியிட்டுள்ளார். அந்த மூன்றாவது சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் .

இதுகுறித்து, அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது. 3 வது சூப்பர் யார் என யாராவது கெஸ் பண்ணுங்கள் என்று கேள்வி கேட்டிருந்த  இந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்