மீண்டும் ஒரே நாளில் ரஜினி மற்றும் கமல் படங்கள்… 15 வருடங்களுக்குப் பிறகு!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (15:50 IST)
ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படமும் கமலின் புதிய படமும் ஒரே நேரத்தில் ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினி நடித்துவந்த அண்ணாத்த திரைப்படம் பாதி முடிந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொண்ட பின்னர் படப்பிடிப்பை முடித்து ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலிஸ் செய்ய உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் இயக்கும் புதிய படமும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையைக் கணக்கில் வைத்து உருவாகி வருகிறது. இதனால் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலிஸ் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடைசியாக சந்திரமுகியும் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரே நாளில் ரிலிஸ் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்