''ஆர்.ஆர்.ஆர் ''படத்திற்காக விருது வென்ற ராஜமெளலி!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (11:58 IST)
அமெரிக்க நாட்டின் நியூயார்க் கிரிட்டிஸ் சிர்கில் விருது ஆர் ஆர் ஆர் படத்திற்காக இயக்குனர் ராஜமெளலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்கிய நான் ஈ. பாகுபலி, பாகுபலி2 ஆகிய படங்கள் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தன.

இதையடுத்து, ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

இப்படமும் பாகுபலி சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த  நிலையில், அமெரிக்க நாட்டின் நியூயார்க் கிரிட்டிஸ் சிர்கில் விருது ஆர் ஆர் ஆர் படத்திற்காக  இயக்குனர் ராஜமெளலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு, சினிமா துறையினர் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்