தெலுங்கில் ராஜாதி ராஜாவான சேரன்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (18:13 IST)
சேரன் இயக்கிய ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை இன்னும் வெளியாகாமல் உள்ளது.


 


டிவிடியாக படத்தை வெளியிட அவர் எடுத்த முயற்சிகளும் முழுமையான பலன் அளிக்கவில்லை. 
 
இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போதே தெலுங்கு மார்க்கெட்டையும் கவனத்தில் கொண்டே இயக்கினார். காரணம், படத்தின் நாயகன் சர்வானந்தும், நாயகி நித்யாமேனனும் ஆந்திரா, தெலுங்கானா ரசிகர்களுக்கு தெரிந்தவர்கள். 
 
சர்வானந்த் ஆந்திராவின் இளம் முன்னணி நடிகர்.
 
தமிழில் படம் வெளியாகாத நிலையில், தெலுங்கில் ராஜாதி ராஜா என்ற பெயரில் படத்தை வெளியிட்டார். படம் அங்கு முதலுக்கு மோசமில்லாமல் ஓடுகிறது. பல வருடங்கள் பெட்டிக்குள் இருந்த படத்துக்கு இந்த வசூல் ஜாக்பாட் மாதிரி.
 
அப்புறம் என்ன... தமிழிலும் படத்தை வெளியிட சுறுசுறுப்பாக முயற்சியில் இறங்கியுள்ளார் சேரன்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்