தவறான ஃபேஸியலால் அலங்கோலமான பிக்பாஸ் நடிகையின் முகம்!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (16:35 IST)
தவறான ஃபேஷியல் காரணமாக தனது முகம் முழுவதும் வீங்கி இருப்பதாக பிக்பாஸ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் சமீபத்தில் பியூட்டி பார்லர் சென்று ஃபேஷியல் செய்வதில் ஏற்பட்ட தவறு காரணமாக அவரது முகம் திடீரென வீங்கிவிட்டது 
 
இதுகுறித்து ஃபேஷியல் செய்த பியூட்டி பார்லரில் உரிமையாளருடன் தான் பேச முயன்றபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் வெளியூர் சென்று விட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்ததாகவும் தனது இன்ஸ்டாவில் அவர் தெரிவித்துள்ளார் 
 
தனக்கு ஃபேஷியல் மட்டும் போதும் என்றும், அதற்கு மேல் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறியும் தன்னுடைய பேச்சை கேட்காமல் அவர் வேறு ஏதேதோ செய்தார் என்றும் அதனால் தான் தன்னுடைய முகம் இப்படி ஆகிவிட்டது என்றும் ரைசா வில்சன் குற்றஞ்சாட்டி உள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்