பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்ததில் இருந்து கவிஞர் சினேகன் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இதற்கு காரணம் சினேகன் அடிக்கடி பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களை கட்டிப்பிடிப்பது தான்.
குறிப்பாக நடிகை நமீதா வெளியேறிய போது சினேக அவரை மீண்டும் மீண்டும் கட்டிப்பிடித்து செய்த செயல்கள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. அதன் பின்னர் தான் சினேகன் அதிகமாக பெண்களை கட்டிப்பிடிக்கிறார் என சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் கழுவி ஊற்றினார்கள்.
தொடர்ந்து அவரது கட்டிப்பிடி சேவை பிக் பாஸ் வீட்டில் நடந்து தான் வருகிறது. பிக் பாஸ் வீட்டில் யார் ஆழுதாலும் சரி, யாருக்கு பிரச்சனை வந்தாலும் சரி முதல் ஆளாக அங்கு சென்று ஆறுதல் சொல்லி தனது கட்டிப்பிடி வைத்தியத்தை அப்ளை பண்ணுவார்.
இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்றிற்கு பெண் வேடமிட்ட சினேகன் அதனை கலைக்காமல் அப்படியே வலம் வந்தார். அப்போது ஆரவ் விளையாட்டாக சினேகனை கட்டிப்பிடிக்க போக சினேக பதறிப்போய் விலகினார். அப்போது ரைசா, இப்பவாது பொம்பளையா இருக்கிற கஷ்டம் தெரியுதா? என நாசுக்காக சினேகனை தாக்கி பேசினார்.
பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை தொட்டு பேசுவது, கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வது தவறு என்பதை உணர்த்துவதாக அது இருந்தது. முன்னதாக தன்னை வா, போ, வாடி, போடி என கூறுக்கூடாது, அது எனக்கு பிடிக்கவில்லை என ரைசா ஏற்கனவே சினேகனை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.