கதை எழுதும்போது எதிர்கொண்ட சவால்கள் என்ன? ரஹ்மான் பதில்!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:25 IST)
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் 99 சாங்ஸ் என்ற படத்தை கதை எழுதி தயாரித்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்து தயாரித்திள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான். ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் ஆகியோர் இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.14 பாடல்கள் கொண்ட இந்த படத்தின் இசை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட உள்ளது.  அதே போல படம் இந்த மாதத்தில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை எழுதும்போது தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து ரஹ்மான் பேசியுள்ளார். அதில் ‘முதல் முறையாக கதை எழுதும்போது நமக்கு தெரிந்த எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டும் எனத் தோன்றும். 300 சதவீதம் கதையெழுதி அதை 100 சதவீதமாக்கி வடிகட்டி கொடுத்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்