புஷ்பா -2 பட முக்கிய அப்டேட் நாளை வெளியீடு!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (21:28 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா 1. பான் இந்தியா படமாக வெளியாகி உலகம் முழுவதும்  ரூ.350 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகி ஹிட்டானதால், இப்படத்தின் 2வது பாகம் தயாராகி வந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பட ஷூட்டிங் தொடக்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பாக இந்தன் படப்பிடிப்புகள் நடந்து வந்தன. இந்த நிலையில்,

மேலும், வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு, 'புஷ்பா 2' பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


இதையொட்டி, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நாளை காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடவுள்ளது.

நாளை புஷ்பா 2 பட டீசர், அல்லது டிரெயிலர், ஃபர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்