வதந்தியை நம்பி அவசரப்பட்டுவிட்ட விஜய்சேதுபதி

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (05:25 IST)
விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்' கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் இருந்து பெற்ற போதிலும் எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்கிறது தயாரிப்பு தரப்பு



 
 
அஜித்தின் விவேகம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் அந்த படம் தோல்வி என்றும் தியேட்டரில் ஆளே இல்லை என்றும் வெளிவந்த வதந்தியை நம்பி 'புரியாத புதிர்' அடுத்த வாரமே ரிலீஸ் ஆனது.
 
ஆனால் இவை எல்லாமே வதந்தி என்பதும், 'விவேகம்' திரைப்படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக நல்ல வசூல் செய்ததால் 'புரியாத புதிர்' படத்திற்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காதது மட்டுமின்றி எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
விஜய்சேதுபதி கொஞ்சம் பொறுமையாக இருந்து ஒரு வாரம் கழித்து இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தால் ஹாட்ரிக் வெற்றியை அவர் பெற்றிருப்பார் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்