‘பர்மா’ படத்தில் ஹீரோவாக நடித்த மைக்கேல், தற்போது ‘பதுங்கி பாயணும் தல’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், அவர் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். அஜித்தின் ஒவ்வொரு படமும் ரிலீஸாகும்போது, அவருடைய ரசிகர்கள் எந்த மாதிரியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பதை விலாவரியாகச் சொல்கிறதாம் இந்தப் படம்.
அத்துடன், சமூக வலைதளங்களில் விஜய் – அஜித் ரசிகர்கள் போடும் சண்டையும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளதாம். ஆனால், இதை சீரியஸாகச் சொல்லாமல், வயிறு வலிக்கச் சிரிக்கும் காமெடியாகச் சொல்லியிருக்கிறார்களாம்.