நிர்வாணப் புகைப்படம் கேட்ட ரசிகர்… பிரியாமணி பதிலால் மன்னிப்பு கேட்டு ஓட்டம்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (12:03 IST)
நடிகை பிரியாமணியின் புகைப்படத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர் ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பருத்திவீரன் படத்தின் மூலம் தேசிய விருது பெற்று இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகை பிரியாமணி. ஆனால் அதன் பிறகு அவருக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பிறமொழி படங்களிலும் அவர் நடிக்க ஆரம்பித்தார். இடையில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் இப்போது மீண்டும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்ற அங்கு கமெண்ட் செய்த ஒருவர் உங்கள் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுங்கள் என ஆபாசமாக பேச, பிரியாமணி அவருக்கு ‘முதலில் உங்கள் அம்மா மற்றும் சகோதரியை பதிவிட சொல்லுங்கள்’ என பதிலளித்துள்ளார். அதையடுத்து அந்த நபர் பிரியாமணியிடம் மன்னிப்புக் கேட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்