கண் சிமிட்டல் நாயகியுடன் செல்பி எடுத்த ஜிகிர்தண்டா நடிகர்

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (21:28 IST)
நடிகர் சித்தார்த் பிரியா வாரியருடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
சமூக வலைத்தளங்களில் ஒரே ஒரு கண் சிமிட்டலின் மூலம் வைரலானவர் மலையாள நடிகை பிரியாவாரியர். இவர் நடித்து வரும் 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தின் டீசரில் வரும் பாடலில் வகுப்பறையில் சக மாணவனை பார்த்து கண்ணடிப்பது போன்ற காட்சி  இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது.
 
இதன்மூலம் அவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நிறைய படங்கள் ஓப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,  சூர்யா -செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் ‘என்.ஜி.கே.’ படத்தில் பிரியா வாரியரை ஹிரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் வெளியானது.
 
இந்நிலையில், அவர் நடிகர் சித்தார்துடன் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது . இதனால் அவர்  சித்தார்த் படத்தில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்