காதலன் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்!

செவ்வாய், 29 ஜனவரி 2019 (16:02 IST)
செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவனி ஷங்கர் சின்னத்திரையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சிரீயலில் நடித்து இல்லத்தரசிகளின் நெஞ்சை கொள்ளைக்கொண்டார்.  பிறகு மேயாத மான்  படத்தின் மூலமாக சினிமாவில்  அறிமுகமானார். 


 
பிறகு நடிகர் கார்த்தியுடன் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் வெளிவந்து வெற்றிநடைபோட்டது. அதனை தொடர்ந்து தற்போது எஸ் ஜே சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ படத்திலும் நடித்து வருகிறார். பிரியா பவானி ஷங்கர் நீண்ட வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறார் என்ற தகவல் வலம் வந்துகொண்டேயிருந்தது ஆனால் அதனை பிரியா உறுதிசெய்யவில்லை. 
 
இந்நிலையில் தற்போது தனது காதலர் ராஜ் வேலுவின் பிறந்த நாளை சமீபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியிருக்கிறார் பிரியா. மேலும் காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


 
"எல்லாரும் என்னை விட்டு போது நீ மட்டும் ஏன் எல்லாத்தையும் எனக்காக விட்டு கொடுக்கிறாய்" என்று கேட்டு காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பிரியா வெளியிட்டிருக்கிறார். 


 
இந்த புகைப்படத்தை பார்த்த பிரியா பவனி சங்கரின் ரசிகர்கள் நீங்கள் இன்னுமா அவரை காதலிக்கிறீங்க என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்