பரத்துடன் டூயட் செய்யும் பிரியா பவானி சங்கர்..!

திங்கள், 12 நவம்பர் 2018 (15:53 IST)
நடிகை பிரியா பவானி சங்கர் நடிகர் பரத்துடன் சேர்ந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். பிறகு வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி  இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது.
 
இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து மான்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியா நடிகர் பரத் நடிக்க இருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இதனை கவிதாலயா தயாரிக்க உள்ளது. அமேசான் பிரைம் ஒரிஜினலில் இந்த சீரிஸ் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்