இந்தப் படமாவது பிரசாந்துக்கு கைகொடுக்குமா?

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (13:22 IST)
பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடித்துவரும் பிரசாந்த், இந்தப் படமாவது கைகொடுக்குமா என்று காத்திருக்கிறார்.



 

 
தர்மேந்திரா, நீல் நிதின் முகேஷ் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘ஜானி கட்டர்’. 2007ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

நீல் நிதின் கேரக்டரில் பிரசாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை வெற்றிச்செல்வன் இயக்க, தியாகராஜன் தயாரிக்கிறார். பிரபு, சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படத்திலும் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி, அதன் படப்பிடிப்புக்காக விரைவில் பிஜி தீவுக்குப் பறக்க இருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்