மிஷ்கின் இல்லாத துப்பறிவாளன் 2 ஓடுமா..? கேள்விக்கு மழுப்பலான பதிலளித்த பிரசன்னா!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (10:30 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வந்த துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கினை நீக்கிவிட்டார் விஷால். பின்னர் விஷால் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றார்.

இதையடுத்து ஒருவரையொருவர் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது முடிந்ததும் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் பிரசன்னாவிடன் இணையவாசி ஒருவர் "மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?" என கேட்டார் அதற்கு பதிலளித்த பிரசன்னா "துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த படத்தில் இல்லை. அதைப் பற்றி வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் விஷால் சிறந்தவர். இந்த படத்தின் மூலம் அவர் நிறைய நிரூபிப்பார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்