சூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரணவ் ! வைரல் போட்டோ

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (20:22 IST)
சமீபத்தில் கேரள முதல்வர் பிணராயி விஜயனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவன் பிரணவ், தனக்குக் கைகள் இல்லாததால் அவருடன் கால்களால் ஷேக்கன் கொடுத்தார். முதல்வரும் இவரது கால்களை கையாக நினைத்து கை குழுக்கினார். இந்த போட்டோ அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் பெற்று வைரல் ஆனது. முதல்வர் பிணராயி விஜயனின் எளிமையை எல்லோரும் பாராட்டினர்.
இந்நிலையில், பிரணவ், இன்று, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்தைப் பார்ப்பதுதான்  அவரது ஆசையாக இருந்தநிலையில், இன்று பிரணவ்வை பார்க்க ரஜினி  நேரம் ஒதுக்கினார். போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சுமார் 10 நிமிடங்கள் இருவருக்குமான சந்திப்பு நடைபெற்றது. 
இந்த புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்