முதல் காட்சி முடிந்ததும் குவியும் நெகட்டிவ் விமர்சனங்கள்.. ‘சலார்’ படமும் தோல்வியா?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (08:18 IST)
பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் அதிகாலை 5 மணிக்கு காட்சி முடிவடைந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் படுதோல்வி அடைந்தது என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் என்ற படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பதால் ‘சலார்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது

தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் இன்று அதிகாலை காட்சி திரையிடப்பட்ட நிலையில் சற்றுமுன் முதல் காட்சி முடிந்த நிலையில் ரசிகர்கள் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கதையில் வலுவில்லை என்றும் பிரபாஸ் பெரும்பாலும் ஸ்லோமோஷனில் தான் வருகிறார் என்றும் இந்த படத்தின் ஒரே ஆறுதல் பிருத்விராஜ் நடிப்பு என்றும் கூறி வருகின்றனர்.

மொத்தத்தில் பிரம்மாண்டமாக அதிக செலவு  செய்து எடுத்த படக்குழுவினர் கதையில் கோட்டை விட்டுவிட்டதாகவும் காட்சி அமைப்பில் அழுத்தம் இல்லை என்றும் ரசிகர்கள் கூறுவது பார்த்தால் இந்த படமும் பிரபாஸுக்கு தோல்வி படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்