பிரமாண்டமான பிரபாஸ் படம்... ஒரு சண்டைக்கு 35 கோடிகள்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (15:59 IST)
பாகுபலி படம் பிரபாஸை பிரமாண்ட நாயகனாக்கியுள்ளது. அவரது அடுத்தப் படமும் மிகப்பிரமாண்டமாக உருவாகிறது.  படத்தின் பட்ஜெட் 150 கோடிகள்.
 

 
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ரூ.150 கோடி பட்ஜெட்டில், ரூ.35 கோடி ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டுமே செலவிடப்படும். தெலுங்கு சினிமாவில் ஒரு சண்டைக்காட்சிக்கு செலவழிக்கப்பட்டும் அதிகபட்ச தொகை இது. நிறைய கார்களும், ஆக்‌ஷனும் நிறைந்த, 20 நிமிட சேஸிங் காட்சி இது.  இப்படத்துக்கு ஷங்கர் - எஹ்ஸான் - லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை  கவனிக்கிறார்.
 
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகவுள்ளது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு  தொடங்கப்படவுள்ளது. இந்தியிலும் வெளியாகவுள்ளதால் பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்