நேற்று தமிழ்நாடு பென்ச் பிரஸ் அமைப்பு சார்பில் மாநில அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இந்த போட்டியில் பிரபல டிவி தொகுப்பாளியான ரம்யா கலந்து கொண்டு மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இது குறித்து ரம்யா கூறிகையில் “மாநில அளவிலான போட்டியாளர்களுடன் மோதுவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் இது போன்ற போட்டிகள் உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி, மன தைரியத்தையும் அளிக்கும். இந்த போட்டியில் 27.5 கி.கி எடையில் தொடங்கிய நான், இறுதியாக 35 கிலோ வரை எடை தூக்கினேன். கூடிய விரைவில் சிறப்பாக பயிற்சி எடுத்து தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொள்வேன்.”என ரம்யா நம்பிக்கையோடு கூறியுள்ளார்.