“பாஸிட்டிவான ஆள் ஜோதிகா” – ஜி.வி.பிரகாஷ்

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (12:11 IST)
’ஜோதிகா பாஸிட்டிவான ஆள்’ எனத் தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

 
 
பாலா இயக்கிவரும் ‘நாச்சியார்’ படத்தில், ரவுடியாக நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஜோதிகா தான் ஹீரோயின். “ஜோதிகா எப்போதுமே பாஸிட்டிவான ஆள். அற்புதமான, மிகச் சிறந்த கோ  ஸ்டார். நீங்கள் சிறப்பாக நடித்தால், உடனே நம்மிடம் வந்து வெளிப்படையாகப் பாராட்டுவார்” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
 
இயக்குநர் பாலா குறித்து, “பாலா சாரிடம் ஒவ்வொரு ஸீனில் நடிப்பதும் கஷ்டமான விஷயம். சும்மா போய் நடித்துவிட்டு  வந்துவிட முடியாது. ஒவ்வொரு ஸீனுக்கும் கடினமாக உழைப்பார். கேரக்டர்களை உருவாக்குவதிலும் சரி, உண்மைக்கு  நெருக்கமான காட்சிகளைப் படத்தில் வைப்பதிலும் சரி… அவர்தான் அதில் மாஸ்டர்” என்று தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
அடுத்த கட்டுரையில்