தொடர்ந்து மரணிக்கும் திரையுலகினர்... டி.இமான் உடன் பணியாற்றிய இசைக்கலைஞர் மரணம்!

Webdunia
திங்கள், 18 மே 2020 (09:46 IST)
கொரோனா ஊரடங்கில் நாட்டு மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து வீட்டில் இருந்து வரும் நிலையில் சற்றும் எதிர்ப்பார்க்காத விதத்தில் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து  உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலிவுட் நடிக்கற் இர்பான் கான் புற்று நோயால்  உயிரிழந்தார்.

அதையடுத்த பழம் பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணித்தார். இப்படி தொடர் இழப்புகளால் சோகத்தில் மூழ்கி இருந்த நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்னர்  ஜி வி பிரகாஷின் 4ஜி பட இயக்குனர் அருண் பிரசாத் கோவையில் விபத்தில் இறந்தார்.

இந்நிலையில் தற்போது மாண்டலின் இசைக்கலைஞர் பிரகாஷ் ஹரிஹரன் திடீரென மரணித்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் எண்ணற்ற பாடல்களுக்கு மாண்டலின் இசையமைத்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் " #RIP பிரகாஷ் ஹரிஹரன், மிக சீக்கிரத்தில் சென்றுவிட்டீர். ஒரு திறமையான எலக்ட்ரிக் மாண்டோலின் பிளேயர் இவர். எனது படங்களில் ஏராளமான மாண்டலின் இசைக்கருவி வாசித்தவர். இந்தச் செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. பிரகாஷின் குடும்பத்திற்காக எனது பிரார்த்தனை.. என மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்