சல்மான் கானுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.. பலர் காயம்..!

Mahendran

வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (12:45 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ரம்ஜான் வாழ்த்து கூற வந்த ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் தினத்தில் நடிகர் சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று சல்மான் கான் வீடு இருந்த சாலையில் ரசிகர்கள் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட நிலையில் நேரம் செல்ல செல்ல ரசிகர்களின் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இதனை அடுத்து நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் இதனால் ரசிகர்கள் சிதறி ஓடியதால் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

இது குறித்து வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் ரம்ஜான் வாழ்த்து கூற வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு சல்மான்கான் ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்