"மாஸ் மரணம் டஃப் தரணும்" வெளியானது பேட்ட சிங்கிள் ட்ராக்!

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (18:13 IST)
வெளியானது! சூப்பர் ஸ்டார் ரஜினியின்  "பேட்ட" பட "மரண மாஸ்" சிங்கிள் ட்ராக் 

 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு ரஜினிக்கு சிம்ரன் ஜோடியாகவும், மற்றொரு ரஜினிக்கு த்ரிஷா  ஜோடியாகவும் நடிக்கிறார்.
 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 2.0 படத்தின் வெற்றியை ரசிகர்கள் முழுமையாக கொண்டாடி தீர்ப்பதற்குள் "பேட்ட" படத்தின் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டது.  பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் 3 போஸ்டர்களை வெளியிட்டுள்ள பேட்ட குழுவினர், இன்று இப்படத்தின் "மரண மாஸ்" என்ற முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்து விட்டனர். 
 
ஊரே "பேட்ட" " மரண மாஸ் " பாடலுக்காக காத்திருந்த தருணத்தில், இன்று காலை மரண மாஸ் உருவான விதத்தை வீடியோவாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது . அந்த வீடியோவில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ மேக்கிங்கை  176,000 பேர் இதுவரை பார்த்து ரசித்துள்ளனர். பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்த  இந்த வீடியோ "மரண மாஸின்" எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்தது. 
 
இந்நிலையில் தற்போது சன் பிச்சர் நிறுவனம் "மரண மாஸ்" லிரிக் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளனர். 
 
"தட்லாட்டம் தாங்க தரலாங்க சாங்க" என தொடங்கும் "மரண மாஸ்" பாடலுக்கு மரண குத்து டான்ஸ் போட்டுள்ளார் தலைவர் ரஜினிகாந்த். இந்தப்பாடலில் யங் லுக்கில் தோற்றமளித்துள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்