முருகதாஸை அழைத்து வாய்ப்புக் கொடுத்த பவர் ஸ்டார் – என்ன முடிவு எடுப்ப்பார்?

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (15:13 IST)
விஜய் படத்தில் இருந்து விலகிய இயக்குனர் முருகதாஸ் இப்போது அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளார்.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து அவர் சில ஹீரோக்களிடம் கதை சொல்லி அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய படங்களில் நடித்த சூர்யா, முருகதாஸை அழைத்து இணைந்து ஒரு படம் பண்ணலாம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் முருகதாஸ் தான் இயக்கப் போகும் அனிமேஷன் படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் கல்யாணும் முருகதாஸுக்கு கால்ஷீட் கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளாராம். இதனால் முருகதாஸ் என்ன முடிவு எடுப்பார் என்ற குழப்பத்தில் உள்ளனர் கோலிவுட் ரசிகர்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்