‘இது நம்ம ஆளு’ ரிலீஸாகி ஒரு வருடம் ஆகப் போகிறது. ஆனால், அடுத்த படத்துக்கு இன்னும் பூஜை போடவில்லை பாண்டிராஜ். இருந்தாலும், தன்னுடைய உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள ‘செம’ படத்தை, தன்னுடைய ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாண்டிராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை, சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கெனவே வெளியான ‘பசங்க 2’ படத்தை, சூர்யா மற்றும் பாண்டிராஜ் இருவரும் இணைந்து தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஜி.வி.பிரகாஷை வைத்து விரைவில் இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். பாண்டிராஜின் உதவியாளர்களான பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கிய ‘புரூஸ் லீ’, வள்ளிகாந்த் இயக்கியுள்ள ‘செம’ ஆகிய இரண்டு படங்களிலும் ஜி.வி.பிரகாஷ் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.