ரஜினிக்கு ஜோடி யார்னு தெரிஞ்சிடுச்சே...

Webdunia
புதன், 17 மே 2017 (10:47 IST)
பா.இரஞ்சித் இயக்கும் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் எனத் தெரியவந்துள்ளது.

 
‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியை இயக்குகிறார் பா.இரஞ்சித். தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம்  தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நான்காவது முறையாக பா.இரஞ்சித்தின் படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். தாதாவைப் பற்றிய இந்தப் படத்தின் கதை, மும்பையில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மும்பையின் தாராவி பகுதி போன்று ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் செட் அமைத்துள்ளனர்.
 
வருகிற 28ஆம் தேதி ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்தில், ரஜினி ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை  வித்யாபாலனிடம் கேட்டனர். ஆனால், கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில், பாலிவுட் நடிகை ஹுமா  குரேஷி, ரஜினி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் வைத்து கடந்த 14ஆம் தேதியே போட்டோஷூட் நடத்தி முடித்துவிட்டார் பா.இரஞ்சித். டெல்லியைச் சேர்ந்த ஹீமா குரேஷி, ஹிந்தி, மலையாளம் மற்றும்  ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்