பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 19 போட்டியாளர்களை கொண்டது. 100 நாட்கள் கொண்ட இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் பிரபலம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் ஜூலிக்கு மக்களிடையே ஆதரவு இருந்தது. பின்னர் திடீரென ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் உண்டானதால் ரசிகர்களின் ஆதரவை இழந்தார் ஜூலி, பிறகு போட்டியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ஜூலியை, ஓவியாவின் ரசிகர்கள் ஜூலியை பேசவிடாமல் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கல்லூரி நிகழ்ச்சியில் நடனமாடிய ஜூலி பிறகு மாணவர்களிடம் பேச முயன்றார். அப்போது கல்லூரி மாணவர்கள் ஒவியாவின் பெயரை கோஷமிட்டு ஜூலியை பேச விடாமல் செய்தனர். பிறகு ஜூலி எனக்கு அமைதி கிடைக்குமா என்று மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்போதும் மாணவர்கள் ஓவியாவின் பெயரை விடாமல் கூறியாதால், நிகழ்ச்சி தொகுப்பாளர், ஜூலிக்கு நன்றி தெரிவித்து மேடையிலிருந்து கீழே இறக்கினார். இதனால் அங்கிருந்து புறப்பட்டார் ஜூலி.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.