வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' திரைப்படம் இந்தியா சார்பாக, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
விசாரணையுடன் போட்டியிடும் பிற படங்களை வைத்தே எதையும் கூற முடியும் என்றாலும் இதுவரை இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படங்களை வைத்துப் பார்க்கையில், ஆஸ்கர் வெல்ல விசாரணைக்கு அதிக வாய்ப்புள்ளதாகவே கருதப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட திரைப்படங்களை தேர்வு செய்ய இரண்டு கட்டமாக பரிந்துரைகள் நடைபெறும். அதன் முதல்கட்டம் அக்டோபர் பாதியில் இருந்து டிசம்பர் 12 வரை நடைபெற்றது. அதில் ஆஸ்கர் விருதுகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிறந்த 6 படங்களை தேர்வு செய்துள்ளனர். அத்துடன் கூடுதலாக 3 படங்களையும் தேர்வு செய்துள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவின் 'விசாரணை' திரைப்படம் இடம் பிடிக்கவில்லையாம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் நடைபெறும் 89வது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 85 திரைப்படங்களில் இருந்து 9 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதிக்கட்டமாக தேர்வு செய்யப்படும் 5 திரைப்படங்கள் வருகிற ஜனவரி 24ஆம் தேதி அறிவிக்கப்படும். இதில் மேலும் கூடுதலாக 3 படங்களை தேர்வு செய்துள்ளது.
1. Australia, “Tanna,” Bentley Dean, Martin Butler, directors
2. Canada, “It’s Only the End of the World,” Xavier Dolan, director
3. Denmark, “Land of Mine,” Martin Zandvliet, director
4. Germany, “Toni Erdmann,” Maren Ade, director
5. Iran, “The Salesman,” Asghar Farhadi, director
6. Norway, “The King’s Choice,” Erik Poppe, director
7. Russia, “Paradise,” Andrei Konchalovsky, director
8. Sweden, “A Man Called Ove,” Hannes Holm, director
9. Switzerland, “My Life as a Zucchini,” Claude Barras, director