விஜய்சேதுபதி - த்ரிஷா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (16:15 IST)
விஜய்சேதுபதி - த்ரிஷா நடிக்கும் 96 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல்முறையாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து வரும் ரொமான்ஸ் படம் '96'. இந்த படத்தில் விஜய் சேதுபதி மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். ஜனகராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
 
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் என்பவர் இசையமைக்கின்றார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவும், கோவிந்த்ராஜ் படத்தொகுப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்