’’இப்போ இல்லீனா எப்பவும் இல்லை…’’ கேக் வெட்டிய ரஜினி…வைரல் ’’புகைப்படங்கள்

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (21:25 IST)
இன்று ரஜினிகாந்த் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் பல்வேறு பிரமுகர்கள், ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறிய வண்ணம் உள்ளனர்.  

இந்நிலையில் இன்று தனது 70 வது பிறந்தாளை முன்னிட்டு அவர் வீட்டில், NOW or NEVER 9 (இப்போ இல்லீனா எப்பவும் இல்லை) என்று எழுதப்பட்ட கேக்கை தன் குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டினார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இன்று ல் தனக்கு  பிறந்தநாள் வாழ்த்துகள்  தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குரிய முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், துணைமுதல்வர் திரு. பன்னீர் செல்வம் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் திரு.முக.ஸ்டாலின் அவர்களுக்கும்ம், மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும்,  மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்தநாளைக் கொண்டாட்கிவரும் உலகெங்கிலுய்ம் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களாக ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுவைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்