விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் நித்யா மேனன்...ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (23:16 IST)
தமிழ் சினிமாவி முன்னணி நடிகர் விஜய் சேதிபதி மலையாலத்தில் மார்க்கோனி மித்தாய் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் விஎஸ் இந்து இயக்கும் ஒரு மலையாள படத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால் கொரொனாவால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனது.

இந்நிலையில் இப்படம் தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு 19,(1) (a) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன், இந்திரன், இந்திரஜித் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 96 படத்துக்கு இசையமத்த கோவிந்த் வசந்தா இதில் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்