பிக்பாஸ் கணேஷ் வீட்டில் நேர்ந்த சோகம் - மனைவியின் எமோஷனல் பதிவு!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (13:31 IST)
கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் .
 
தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு சமைரா என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் தற்போது நிஷாவின் வாழ்வில் முக்கியமான ஒரு நபரை இழந்துவிட்டதாக எமோஷனல் பதிவு ஒன்றை இட்டுள்ளார். "என் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு! என் கமலா பாட்டி! அவர் சிறந்த சமையல்காரர், சிறந்த அரவணைப்பாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த நண்பர், சிறந்த ஸ்பாய்லர் மற்றும் இன்னும் பல. எங்கள் இதயங்களில் ஒரு பெரிய துளை விட்டுவிட்டீர்கள், அது வேறு யாராலும் நிரப்பப்படாது! அமைதியாக இருங்கள் என் செல்ல பாட்டி என மனமுருகி பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்