சுஷாந்தை அடுத்து…. டோனி பட நடிகர் தற்கொலை …

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (00:29 IST)
கடந்தாண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தற்போதும் விவாதங்களும் விமர்சனங்களும் பரவி வருகிறது.  இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தவர் ஆவார்.

இந்நிலையில், அதே படத்தில் நடித்திருந்த மற்றொரு நடிகர் சந்தீப் நாஹார் என்பவ்ர் இன்று மும்பை கொரேனானில் உள்ள அவது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சந்தீப் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக மனவேதனை அடைந்ததாகவும் இதனால் நான் வாழ்கையில் தவறான முடிவை எடுக்க நேரிடும் எனத் தெரிவித்து ஒரு வீடியோ பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்