ஜி.வி.பிரகாஷூக்கு குவியும் கல்லூரி மாணவிகளின் அப்ளிகேசன்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (06:20 IST)
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், கோலிவுட் திரையுலகில் அதிக படங்கள் நடித்து கொண்டிருக்கும் ஒரு நாயகனாக வலம் வருகிறார். இவர் நடித்த 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய படங்கள் தவிர மற்ற அனைத்து படங்களும் படுதோல்வி ஆனாலும் படங்கள் குவிந்து வருகிறது.



 


இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன '100% லவ்' என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் ஆனார் என்பதை பார்த்தோம். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்க தமன்னா முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை பேச்சுவார்த்தை நடந்தது. கடைசியில் தற்போது புதுமுகத்தை புக் செய்ய படக்குழு முடிவு செய்துவிட்டதாம்

இந்த நிலையில் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக  நடிக்க விருப்பம் உள்ள இளம்பெண்கள் படக்குழுவினர்களை அணுகலாம் என்று விளம்பரப்படுத்தி ஒரு இமெயில் முகவரியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த இமெயில் மூலம் ஏராளமான பயோடேட்டாக்கள் குவிந்து வருகிறதாம். இதில் பாதிக்கும் மேல் கல்லூரி மாணவிகளின் பயோடேட்டா என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்