விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூட பார்த்ததில்லை - மிஷ்கின்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (14:30 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மிஷ்கின், விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூட பார்க்கவில்லை என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள்து.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மிஷ்கின். இவர் சித்திரம் பேசுதடி,அஞ்சாதே, ஓ நாயும் ஆட்டுக் குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர்,  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு-2 படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரும்,  நடிகருமான விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மிஸ்கின்,  மேடையில் பேசும்போது, விஜய் ஆண்டனியின் ஒரு படத்தையும் பார்த்ததில்லை என்றார்.

இதைக் கேட்ட விஜய் ஆண்டனி மற்றும் அரங்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழ் சினிமாவில் நான்  என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார்.அப்படியிருந்தும் அவர் படங்களை பார்க்கவில்லை என அவரது டிரைலர் வெளியீட்டு விழாவில் வந்து  மிஸ்கின், கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்