அனிருத்தின் 'நெவர் எவர் கிவ்-அப்' -இல் திடீர் மாற்றம்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (00:58 IST)
அஜித் நடித்த 'விவேகம்' படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் நெவர் எவர் கிவ் அப் என்ற பெயரில் அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சியை இந்த மாதம் நடத்த திட்டமிட்டிருந்தார்



 
 
ஆனால் சமீபத்தில் அமெரிக்காவை ஹரிக்கேன் புயல் புரட்டி எடுத்தது. இதனால் அமெரிக்காவின் பல நகரங்கள் நீரில் மூழ்கி படுசேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் அனிருத் தனது இசை பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, 'ஹர்க்கேன் புயலால் அமெரிக்க மக்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில் எனது 'நெவர் கிவ் அப்' இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளேன். நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்