ஒரு டீசர் வந்துட கூடாதே.. மாஸான சீனை தமாஸாக்கிய நெட்டிசன்கள்! – வைரலாகும் கேஜிஎப்2 மீம்!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (11:50 IST)
கன்னட நடிகர் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் வெளியான நிலையில் அதில் உள்ள ஒரு காட்சியை நெட்டிசன்கள் மீம் மெட்டீரியலாக்கி உள்ளது ட்ரெண்டாகி வருகிறது.

கன்னட நடிகர் யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேஜிஎஃப் 2. இந்த படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய நிலையில் கொரோனா காரணமாக தாமதமானது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த டீசரின் ஒரு காட்சியில் ராக்கி பாய் போலீஸ் ஜீப்களை மெஷின் கன்னால் சுட்டு சிதறடிப்பார். பின்னர் கனல் கக்கும் துப்பாக்கியின் முனையில் சிகரெட்டை பற்ற வைப்பார். இந்த காட்சியில் தமிழ் காமெடி நடிகர் வடிவேலு சிகரெட் பற்ற வைப்பது போல மார்றி குசும்பான மீமை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள், இந்த மீம்கள் பெரும் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்