மறைந்த நடிகருக்கு விஜய் பட இயக்குனர் அஞ்சலி!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:17 IST)
இரு தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் பலியான டப்பிங் கலைஞர் அருண் அலெக்ஸாண்டருக்கு நெல்சன் திலீப் குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரபல டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்தவர் அருண் அலக்ஸாண்டர். அவர் ஹாலிவுட்டில் வெளியாகும் பிரபல படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசியதன் மூலம் பிரபலமானவர். சமீபகாலமாக மாநகரம், கோலமாவு கோகிலா மற்றும் கைதி ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது அவருடைய நண்பர்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ‘என் மனது நீங்கள் இல்லை என்பது ஒப்புக்கொள்ள மறுக்கிறது. நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர் மற்றும் நடிகர். சீக்கிரமே எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டீர்கள் நண்பா. உங்கள் இழப்பு இப்போது உணரத்தொடங்கியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்