தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் நானும் ரௌடிதான் படத்தில் இருந்து காதலித்து வருகிறார்கள்.
பின்னர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அண்மையில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த செய்தி பெரும் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது நயன்தாரா குழந்தை பிறப்புக்கு பின் தங்க சங்கலியில் தாலி அணிந்து உலா வருகிறார். அதற்கு முன்னர் மஞ்சள் கயிறை வெளியில் தெரியும்படி அணிந்து செம டிரண்ட் ஆக்கினார்.