இந்தியன் 2: கமலுக்கு முதன்முறையாக ஜோடியாகிறார் நயன்தாரா?

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (22:57 IST)
கடந்த 2015ஆம் ஆண்டு கமல் நடித்த 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் இன்னும் அவருடைய அடுத்த படம் ரிலீஸ் ஆகவில்லை. விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படும் விஸ்வரூபம் 2' என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. சபாஷ் நாயுடு கிட்டத்தட்ட, 'மருதநாயகன்' கதையாகிவிட்டது.

இந்த நிலையில் கமலின் அடுத்த படம் 'இந்தியன் 2' என்று கூறப்படுகிறது. 2.0 படத்திற்கு பின்னர் ஷங்கர் இயக்கும் இந்த படம் கமலின் மிக அதிக பட்ஜெட் படமாக அமையவுள்ளதாம்

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகி வேடத்திற்கு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் 'அறம்' படத்தை பார்த்த பாதிப்பில் இந்த படத்தில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஷங்கர் விரும்புகிறாராம். அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நயன்தாரா கேட்கும் மிக அதிக சம்பளத்தை கொடுக்க லைகாவும் தயாராக இருப்பதால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாராவுக்கு முதல் பாகத்தில் சுகன்யா நடித்தது போன்று புரட்சிப்பெண் வேடமாம்!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்