அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

Mahendran
புதன், 22 மே 2024 (18:03 IST)
அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜித் தவிர மற்ற நட்சத்திரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அஜித் ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. 
 
தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு சிலர் ‘குட் பேட் அக்லி’  படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக அடித்து விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 
உண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம் டிராப் ஆனதால் அஜித் மீது நயன்தாரா மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும் இனிமேல் அஜித் படத்தில் நடிக்க அவர் வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவதை அஜித் ரசிகர்களே நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் நயன்தாரா இந்த படத்தில் பரிசீலனை செய்யப்படவே இல்லை என்று தான் பட குழுவினர்களிடமிருந்து கசிந்த தகவலாக உள்ளது. இருப்பினும் நயன்தாரா இந்த படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்